Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இனிமே இத ஒதுக்காதீங்க… பழைய சாதம் சாப்பிட்டால் இந்த நோய் வராதாம்…!!!

பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் குடல் அழற்சி நோய் வராமல் தடுக்கலாம் என சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் முன்னோர்களின் காலத்தில் பல்வேறு உணவு வகைகள் இருந்தன. அதிலும் குறிப்பாக சோளம் மற்றும் கம்பு போன்ற உணவுகள் உடலுக்கு நலம் தருபவை. அப்போது வாழ்ந்த முன்னோர்களுக்கு எவ்வித நோயும் வருவதில்லை. அப்போது பழைய சோறு என்பது ஒரு அமிர்தமாக இருந்தது. தற்போது அதனை மக்கள் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் பழைய சோறு சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன.

அதன்படி பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் குடல் அழற்சி நோய் வராமல் தடுக்கலாம் என்று சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் குடல் வளர்ச்சி பாதிப்பு குறித்து அறிய 60 நோயாளிகளிடம் பரிசோதனை செய்து எடுக்கப்பட்ட ஆய்வில் பழையசாதம் சாப்பிடுபவர்களுக்கு அல்சர் மற்றும் குடல் அழற்சி உள்ளிட்ட நோய்கள் வராது என தெரியவந்துள்ளது. அதனால் இனிமேல் பழைய சோறை வெறுக்காமல் சாப்பிடுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Categories

Tech |