Categories
தேசிய செய்திகள்

இனிமே இப்படிப் பண்ணுவியா… “2ஆம் வகுப்பு மாணவருக்கு மரண பயம் காட்டிய ஆசிரியர்”…  அப்படி அவ என்ன பண்ணா..?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவனை தலைகீழாக கட்டி தொங்க விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், அஹ்ரௌராவில் உள்ள சத்பவ்னா ஷிக்ஷன் சன்ஸ்தான் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் சோனு யாதவ் என்கின்ற சிறுவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை உணவு இடைவேளையின் பொழுது மற்ற மாணவர்கள் அனைவரும் உணவு அருந்திக் கொண்டிருந்த வேளையில், இந்த சிறுவன் மட்டும் குறும்பு செய்து வந்துள்ளான். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பள்ளி முதல்வர் அந்த சிறுவனை தண்டிக்க வேண்டும் என்று எண்ணி ஒரு காலை இறுக்கமாக பிடித்து பள்ளிக் கட்டிடத்தின் முதல் மாடி பால்கனியில் இருந்து தலைகீழாக அந்த சிறுவனை தொங்கவிட்டு உள்ளார்.

இதனால் பயந்து போன அவன் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று கூறி கதறி அழுது மன்னிப்பு கேட்டார். இதன் பிறகே பள்ளி முதல்வர் அவரை மேலே தூக்கினார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவானது. அதனை யாரோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்ட ஆட்சியர் அவர் மீது புகார் பதிவு செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டதால் இந்த சம்பவம்  நீதிபதி பிரவீன்குமார் கவனத்திற்கு வரபட்டது. பின்னர் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த பள்ளியின் முதல்வர் மீதும் புகார் அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |