சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் சீரியல் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில் எவ்வித தயக்கமும் இல்லாமல் அனைவரின் விமர்சனங்களுக்கும் பொறுமையாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி பதில் அளித்து வந்தனர். அதனைப் போலவே திருமணம் முடிந்த பிறகு அடிக்கடி வெளியில் சென்ற இவர்கள் அந்த புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.
அதனைப் போலவே தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சிக்க ஆரம்பித்ததை பார்த்து மகாலட்சுமி அதனை செய்யக்கூடாது என கூறியுள்ளார்.இனிமேல் இதை செய்யாமல் அன்பே வா சீரியலை விமர்சனம் செய்யுங்கள் என்றும் உங்களை நம்பி ஒரு ஸ்நாக்ஸ்யையும் விட்டு வைக்க முடியல என தோசை கட்டையை வைத்து மகாலட்சுமி மிரட்டி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க