Categories
தேசிய செய்திகள்

இனிமே உஷாரா இருங்க… சமூகவலைத்தள பெண் தோழி… நேரில் சென்ற வியாபாரி… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

மும்பையில் சமூக வலைதளம் மூலமாக அறிமுகமான பெண்ணிடம் வியாபாரி ஒருவர் 4 லட்சம் பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை காட்கோபர் என்ற பகுதியில் 41 வயது வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். அவர் கடந்த மாதம் 29ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் தீபாலி என்ற பெயரில் பெண் ஒருவரிடம் நட்புறவு கொண்டுள்ளார். அதன்பிறகு இருவரும் செல்போன் மூலமாக சாட்டிங் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2ம் தேதி தீபாலி பிவண்டியில்
இருக்கும் வீட்டிற்கு வருமாறு வியாபாரிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை நம்பி வியாபாரி அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரின் வீட்டிற்கு இரண்டு பெண்கள் மற்றும் வாலிபர் வந்துள்ளனர்.

அங்கிருந்த வியாபாரியை பிடித்து நான்கு பேரும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனைப் பற்றி வெளியில் சொன்னால் தீபாலியை கற்பழிக்க முயற்சி செய்ததாக பூரி போலீசில் புகார் அளிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அதன்பிறகு வியாபாரி வங்கி கணக்கில் இருந்து ரூ.2, 32,000 பணத்தை தங்களின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளனர். அதன் பிறகு அவரின் கிரெடிட் கார்டு மூலம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்களை வாங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வியாபாரியை வலுக்கட்டாயமாக ஒரு வீடியோ பதிவு செய்து, அதில் திபாலிடம் இருந்தே கடனாகத் தான் பணம் பெற்றதாகவும், அதனால் அந்த பணத்தை திரும்ப கொடுத்ததாகவும் பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு வியாபாரியை விடுவித்தனர். அதனால் பாதிக்கப்பட்ட வியாபாரி சம்பவம் பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |