Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமே உஷாரா தான் இருக்கணும்…. 14 பவுன் நகை திருட்டு…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

பற்கள் தயாரிக்கும் ஆய்வு கூட உரிமையாளர் வீட்டில் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே உள்ள அரசு நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செயற்கை பற்கள் தயாரிக்கும் ஆய்வுகூடம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டு பீரோவில் வைத்திருந்த நகைகள் சரியாக உள்ளதா என திறந்து பார்த்தபோது தங்க சங்கிலிகள், முத்துமாலை குழந்தையின் மோதிரம் என 14 பவுன் தங்க நகைகள் திருடுபோய் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரகாஷ் உடனடியாக பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வுகூடத்தில் வேலை பார்த்த மதுரை மாவட்டம் ஊமச்சிகுளத்தை சேர்ந்த ஹரன்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரகாஷ் அடிக்கடி வீட்டு சாவியை ஹரன்குமாரிடம் கொடுத்து வைப்பது வழக்கம்.

எனவே ஹரன்குமார் பிரகாஷ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அவரது வீட்டிற்கு சென்று பீரோவில் உள்ள நகைகளை சிறிது சிறிதாக மாட்டி கொள்ளாதவாறு திருடி வந்துள்ளார். மேலும் தற்போது மட்டிகொண்டதாகவும் ஹரன்குமார் வாக்குமூலம் அளித்தார். இதனைதொடர்ந்து போலீசார் ஹரன்குமாரை கைது செய்து அவர் திருடிய 14 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |