நீதிமன்றத்தில் மனுதாரர் வக்கீல் நான்கு முறை ஆஜராக வில்லை என்றால் வழக்கை தள்ளுபடி செய்ய கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் மனுதாரரின் வக்கீல் நான்கு முறை ஆஜராகவில்லை என்றால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது வழக்கம். அதனால் பல்வேறு குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். மக்களின் நலனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மனுதாரரின் வக்கீல் தொடர்ந்து 4 முறை ஆஜராக வில்லை என்பதற்காக வழக்கைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மனுதாரரின் வக்கீலாக ஆஜராக வில்லை என்றால், வேறு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். மேலும் ஏழைகள் மற்றும் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு வழக்குகளை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் உதவ வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.