கம்பம் காவல்நிலையத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் வரவேற்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் யாரிடம் புகார் கொடுப்பது எந்த அதிகாரியை சந்திப்பது என்று குழப்பத்தில் தயங்கி நிற்பது பல இடங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. இதனை தடுக்க தமிழகத்தில் அனைத்து காவல்நிலையங்களிலும் வரவேற்பாளர்களை நியமித்து வருகின்றனர். இதனால் காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்க முடியும்.
மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க வந்த நேரம், புகாரின் தன்மை ஆகியவற்றை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் புகார் அளிக்க வந்தவர்கள் யாரை சந்திக்க வேண்டும் என்பதையும் வரவேற்ப்பாளர்கள் எடுத்து சொல்ல வேண்டும். அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் கம்பம் காவல்நிலையத்தில் வரவேற்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஏற்பாடு பொதுமக்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.