காரில் உணவை எடுத்துச் செல்லக் கூடாது. ஏன் தெரியுமா? அது குறித்து இந்த தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய நவீன நாகரிக உலகில் அனைவரும் தொலை தூர பயணத்தை மேற்கொள்ளும் போது காரை பயன்படுத்துகின்றனர். அதிலும் சிலர் வெளியில் உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பதற்காக வீட்டிலிருந்து உணவை எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்வது நல்லது என்று சொன்னாலும், அது ஒருவிதத்தில் ஆபத்தானதே. ஏனெனில் காரில் உணவை எடுத்துச் செல்வது அபாயகரமானதாக மாறுகிறது.
நாம் எடுத்துச் செல்லும் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதேசமயம் பாக்டீரியாக்கள் 4 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் வேகமாக வளரும். வெப்பநிலை கோடை காலங்களில் 60 டிகிரி செல்சியஸில் இருக்கும். காரில் உள்ள வெப்பநிலை வெளியே இருக்கும் வெப்பநிலையை காட்டிலும் அதிகமாக இருக்கும் போது கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் நாம் வைத்திருக்கும் உணவுகளில் செல்ல வாய்ப்பு இருக்கின்றது.
இதனால் நம் உணவில் பாக்டீரியாக்கள் புகுந்து அது கெடுதல் தரும் உணவாக மாறி விடுகிறது. ஒருவேளை வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு மட்டும் தான் அந்த உணவு பாதுகாக்க இருக்கும். அதற்குப் பின்பு அந்த உணவு ஃபுட் பாய்சன் ஆக மாற வாய்ப்புள்ளது. எனவே காரின் கேபினில் உண்ணகூடிய பொருட்களை ஒருபோதும் எடுத்துச் செல்லாதீர்கள்.