Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இனிமே சாகும் வரை சிறை தான்…. சிறுமிக்கு பாலியல் தொல்லை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஹாஜா முகமது என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஹாஜா முகமது அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி கொடுப்பதாக வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக கீழக்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஹாஜா முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இதற்க்கான இறுதி விசாரணை நடந்தது. அப்போது வலக்கை விசாரித்த தீதிபதி சுபத்திர, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹாஜா முகமது வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் மற்றும் 1 லட்சத்தி 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Categories

Tech |