Categories
மாநில செய்திகள்

இனிமே சென்னைக்கு தண்ணி பஞ்சமே இருக்காது… 830 மில்லியன்… சென்னை குடிநீர் வாரிய அதிகாரி அறிவிப்பு..!!

சென்னை மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் விநியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகள் ஆன பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த ஏரிகளுக்கு நீர் வரத்து கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும். தண்ணீர் மற்றும் மழைநீர் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் கண்டலேறு அணையில் இருந்து போதிய அளவு நீர் இருப்பதால் கிருஷ்ணகிரி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான முதல் தவணை நீர் பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

இந்த தண்ணீரும் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை மற்றும் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இதன்காரணமாக ஏரிகளில் நீர் நிரம்பியதால் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 10 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பதால் சென்னை மாநகருக்கு வழங்கப்படும் குடிநீர் 750 மில்லியன் லிட்டரில் இருந்து 830 மில்லியன் லிட்டராக உயர்த்தி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடரும் நாட்களில் போதுமான மழை இருந்தால் இதே அளவு அடுத்த ஆண்டு வினியோகம் செய்ய முடியும். தற்போது இருக்கும் தண்ணீர் மூலம் அடுத்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வரை தாக்குபிடிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதனை பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |