Categories
லைப் ஸ்டைல்

“இனிமே செல்போனை முன்பாக்கெட்டில் வைக்காதீங்க”… முக்கியமா ஆண்கள்… ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!!

செல்போன்களை பேண்ட் பாக்கெட்டில் வைக்கக்கூடாது. முக்கியமாக ஆண்கள். ஏன் தெரியுமா..? ஆய்வுகூறும் தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆளுக்கு ஒரு செல்போன் என்பது தற்போது சகஜமாகிவிட்டது. மொபைல் போன்களில் வெளிப்படும் கதிர்வீச்சு நம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொலைபேசியை உங்கள் பாக்கெட்டில் வைத்து இருந்தால் கருவுறுதல் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைக்காமல் இருக்க வேண்டும்.  மொபைல் போனை காதுகளில் நீண்ட நேரம் வைத்து பேசினால் அதிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சு உங்கள் காதுகளுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் கதிர்வீச்சு விந்து அணுக்களையும் தற்போது பாதிக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது. விந்து எண்ணிக்கையில் செல்போன் கதிரின் விளைவுகளை தீர்மானிக்க பல ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

ஐரோப்பிய ஆய்வாளர்கள் நீண்ட காலமாக தங்களது தொலைபேசிகளை  முன் பைகளில் வைத்திருந்த ஆண்களுக்கு குறைவான விந்தணுக்கள் இருப்பதையும், அதிக டிஎன்ஏ துண்டு துண்டாக உடைந்து விந்து அணுக்கள் அதிகமாக இருந்ததும் கண்டறிந்துள்ளனர். முக்கியமாக ஆண்கள் மொபைல் போன்களை பேண்ட் பாக்கெட்டில் நீண்டநேரம் வைப்பதை தவிர்க்க வேண்டும். பெண்களைவிட அதிக அளவு ஆண்களுக்கு தான் இந்த தாக்கம் ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

இதற்கு காரணம் ஆண்களுக்கு கருப்பைகள் இருக்கும் இடம் காரணமாக இந்த பிரச்சனை ஏற்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை எளிதில் ஏற்படாத வகையில் அவர்களின் உடலுக்குள் கர்ப்பப்பை  உள்ளன. ஆண்களின் உடலில் உள்ள விந்துக்கள் உடலுக்கு வெளியே விந்துப்பையில் உள்ளது. அத்தகைய சூழலில் பெண்களை விட ஆண்களுக்கு தான் இந்த வகை கதிர்வீச்சின் தாக்கம் அதிகமாக பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Categories

Tech |