Categories
தேசிய செய்திகள்

இனிமே டெஸ்ட் இல்லாம உடனே ஓட்டுனர் உரிமம் கிடைக்கும்… புதிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்றால் வாகன ஓட்டுனர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுநர் உரிமம் பெறமுடியும்.

இந்தியாவில் ஓட்டுநர் பயிற்சி மையங்களின் அங்கீகாரத்திற்கான வரைவு அறிவிப்பு ஒன்றை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் இருந்து வாகன ஓட்டுனர் பயிற்சி பெற்றால், வாகன ஓட்டுநர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுனர்கள் தங்கள் உரிமங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த விதிமுறை இன்னும் வரைவு நிலையில் தான் இருக்கின்றது. இது ஓட்டுனர் உரிமங்களை பெறுவதை மிகவும் எளிதாகும்.

அத்தகைய மையங்களிலிருந்து ஓட்டுனர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த எந்த ஒரு நபரும், ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கை போக்குவரத்து துறையில் நல்ல பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் அதிகரிப்பதை மேலும் உறுதி செய்யும்.

இது அவர்களின் செயல் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சாலை விபத்துக்களையும் குறைக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி இந்த வரைவு அறிவிப்பு போது ஆலோசனைக்காக அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Categories

Tech |