Categories
சினிமா தமிழ் சினிமா

‘இனிமே தம்பின்னு தான் கூப்பிடனும்’ … பிக்பாஸிடம் அன்பு கோரிக்கை வைத்த பாலா …!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் பாலாஜியை கன்பெக்சன் அறைக்குள் அழைத்து பிக்பாஸ் பேசியுள்ளார் .

பிக்பாஸ் 4- நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் டாஸ்க் ஒருபுறம் நடக்க போட்டியாளர்களை தனித்தனியே கன்பெக்சன் அறைக்கு அழைத்து மனம் விட்டு பேச வைக்கிறார் பிக்பாஸ் . அந்தவகையில் நேற்றைய எபிசோடில் பாலாவிடமும் பேசியுள்ளார் . அதில் ‘இந்த வீட்டில் இருப்பது எப்படி இருக்கு?’ என பிக்பாஸ் கேட்க, கண்கலங்கி பதிலளித்துள்ளார் பாலா.

 

‘யாரிடமாவது கை நீட்டி பேசினால் கையை இருக்குன்னு சொல்லிடுவாங்களோ ன்னு பயமா இருக்கு. என்னுடைய வாய்ஸ் ஹார்டா தான் இருக்கும். நான் சண்டை போடுற டோன்ல பேசுறேன்னு எல்லாரும் சொல்றாங்க. நான் செய்றது எல்லாம் தப்பா? சரியான்னு புரியல’ என்று தனக்குள் இருந்த துயரத்தை கொட்டி தீர்த்தார் பாலா. இதற்கெல்லாம் ஆறுதல் சொன்னார் பிக்பாஸ் . பின்னர் பிக்பாஸிடம் ‘என்னை தம்பின்னு கூப்பிடுங்க’ என்ற அன்பு கோரிக்கையை பாலா வைக்க, பிக் பாஸும் ‘நல்லா விளையாடுங்க தம்பி’ என கூறி உற்சாகப்படுத்தி வெளியே அனுப்பியுள்ளார் .

Categories

Tech |