ராம்லீலா நாடகத்தில் ராமர் வேடமேற்று நடித்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த நபருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அப்பகுதியில் நடைபெறும் ராம்லீலா நாடகத்தில் ராமன் வேடம் ஏற்று நடித்து வருகிறார் டேனிஷ். இவர் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் ஆவார். முஸ்லிமை சேர்ந்த மற்றொரு நபர் இந்த வேடத்தில் நடித்து வருவதால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த நபருக்கும், கொலை மிரட்டல் விடுத்த நபருக்கும் ஏற்கனவே வாடகை பிரச்சினை சம்பந்தமாக மோதல் இருந்துள்ளதால் இந்து கடவுளின் கதாபாத்திரத்தை வைத்து பிரச்சினையை உருவாக்கலாம் என்ற நோக்கில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த 7 வருடங்களாக ராமர் வேடத்தில் நடித்து வருகிறார் டேனிஷ். நாடகக் கலைஞரான இவர் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது அப்பகுதியில் அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தது. எனவே இது சம்பந்தமாக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளனர்.