தினமும் குடிக்கும் பாலில் இவற்றையும் சேர்த்து குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். இதனையடுத்து தினம் தோறும் நாம் பால் குடிப்பதால் அதிக அளவு சத்துக்கள் கிடைக்கும்.
பாலில் உள்ள நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதனுடன் சில பொருட்களை சேர்த்து குடித்தால் கூடுதல் நன்மை கிடைக்கும். அதன்படி பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி, கால்சியம் அதிகரிக்கும். இருமல் மற்றும் சளி போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக இது இருக்கும். மிளகுத் தூள் சேர்த்தால் தொண்டை வலி, எரிச்சல், கர கரப்பு ஆகியவற்றை நீக்கும். இதை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.