அதிக அளவு முட்டை சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் உணவில் முட்டை மிக முக்கிய இடம் பிடித்துள்ளது. மாமிசம் சாப்பிடாதவர்கள் அனைவரும் முட்டையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் முட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முட்டை அதிக அளவு சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனை அதிக அளவு உண்பதால் ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது உலகில் பெருமளவு மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு உணவு கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
அதை மீறினால் கட்டாயம் நோய் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் அதிக அளவில் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று பிரிட்டிஷ் உள்ள ஆய்வு மையம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த ஆய்வில் 50 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அதிக முட்டை சாப்பிட்டவர்களுக்கு 60% வரை நீரிழிவு நோய் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை பிரிட்டிஷ் ஜெனரல் ஆஃப் நியூட்ரிஷன் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.