அரசு வேலைகளில் முன்னுரிமை கிடைப்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பித்து வருகின்றனர். ஒருசிலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறிவிடுகின்றனர். இவ்வாறு புதுப்பிக்க தவறியவர்களுக்கு புதுப்பிக்க தமிழக அரசால் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இதுவரை ஏராளமானவர்கள் பதிவு செய்து வ்வாறுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 24 -25 வயதுடைய இளைஞர்கள் 24.88 லட்சம் பேரும், 36 முதல் 57 வயது உடையவர்கள் 12.26 லட்சம் பேரும் பதிவு செய்துள்ளனர். இதில் 58 வயதை கடந்த 10,907 பேர் இன்னமும் தங்களுடைய பதிவை புதுப்பித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.