அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் வருகின்ற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பாஸ்டேக் அட்டை கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய வகையில் பாஸ்டேக் இன்னும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனால் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் நிற்காமல் பாஸ்டேக் பணம் வசூலிக்கப்பட்டு விரைவாகச் செல்ல முடியும்.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் சுங்க சாவடிகளை கடக்கும்போது பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் முன்னர் விற்பனை செய்யப்பட்ட எம் மற்றும் என் பிரிவு நான்கு சக்கர வாகனங்களுக்கும் இனிமேல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பாஸ்ட் டேக் அட்டை கட்டாயம்.
மேலும் மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ன் படி நான்கு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் டீலர்களிடம் புதிதாக நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்யும்போது கட்டாயம் பாஸ்டேக் என்னை அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.