Categories
தேசிய செய்திகள்

இனிமே வாரத்தில் 3 முறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

மும்பை நெல்லை இடையே பிப்ரவரி 27ஆம் தேதி முதல் வாரம் மூன்று முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி முதல் மும்பை மெல்லிடையே வாரம் மூன்று முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மும்பையிலிருந்து சனி, செவ்வாய் மற்றும் புதன் கிழமை அன்று இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மூன்றாவது நாள் காலை நெல்லை சென்றடையும். மார்ச் 1 முதல் நெல்லையிலிருந்து திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |