தேயிலை பறிக்கும் போது பெண் தொழிலாளி பாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோயில் மேடு பகுதியில் தோட்ட தொழிலாளியான ரெஜினா லூகாஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரெஜினா லூகாஸுக்கு இசையில் அதிக ஆர்வம் உண்டு. இதனால் தேயிலை பறிக்கும் போது, சோர்வடையாமல் இருப்பதற்காக தனது இனிமையான குரல் வளத்துடன் பாட்டு பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதனை மற்ற தொழிலாளர்களும் உற்சாகமாக கேட்பது வழக்கம். இந்நிலையில் ரெஜினா லூகாஸ் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்ற திரைப்பட பாடலை பாடி பச்சை தேயிலை பறிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.