குடியாத்தம் பகுதியில் உள்ள காளியம்மன் பட்டியில் ஜெயக்குமார்- குமுதா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். ஜெயக்குமார் ஒரு விசைத்தறி தொழிலாளி ஆவார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் இன்று ஜெயக்குமார் ஒரு வீடியோவை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் கொரோனா ஊரடங்கு காரணமாக விசைத்தறி தொழில் நலிவடைந்து உள்ளது. அதனால் சரியான கூலி வழங்கப்படவில்லை. எனவே எனக்கு கடன் அதிகமாகிவிட்டன. விசைத்தறி தொழிலில் சரியான வருமானம் இல்லாத காரணத்தினால் நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்.
இனியாவது விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஒழுங்காக கூலி வழங்க வேண்டும். மேலும் எனது இறுதி ஊர்வலத்திற்கு அந்தப் பகுதியில் உள்ள அனைத்து விசைத்தறி தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். என்னுடைய மனைவி குழந்தைகளுக்கு அரசு உதவ வேண்டும் என்று உருக்கமாகப் பேசி வீடியோவை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து பணிபுரியும் இடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் பதிவு செய்த வீடியோவை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி விட்டார்.
அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சம்பவ நடந்த இடத்திற்கு சென்று காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு விசைத்தறி தொழிலாளி வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன.