ஆயுத பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ஆயுத பூஜை வாழ்த்து செய்தியில்,” அநீதியை அழித்ததன் அடையாளமாக பெண் சக்தியின் கடவுள் வடிவமான துர்க்கையை நாம் வணங்குகிறோம். தேச கட்டுமானத்தில் பெண்களுக்கு மரியாதையும் சம பங்களிப்பும் வழங்க உறுதி ஏற்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.” என்று அவர் கூறியிருந்தார்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தான் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,” நாட்டு மக்கள் அனைவரும் நல்ல வளமும் நலமும் பெற்று ஆரோக்கியமான உடல் நிலையுடன் வாழ ஸ்ரீ துர்க்கையை வேண்டுகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில். “மக்கள் அனைவருக்கும் துர்கா தேவியின் ஆசி எப்போதும் இருக்கும். அந்த ஆசி இந்தியாவில் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் பெருகட்டும் அனைவரது வாழ்வையும் ஒளிரச் செய்யட்டும்.” என்று கூறியுள்ளார்.