மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தான் டாக்டர் எம்ஜிஆர் பெயரை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சூட்டினார் என்று அரசு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் திமுகவின் இந்த செயலானது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என்று ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் மக்கள் செல்வாக்கு மிக்க, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற, மக்கள் மனதில் இன்றளவிலும் நீங்காத இடம் பிடித்துள்ள தலைவர் எம்ஜிஆர்-ஐ சிறுமைப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.
அதேபோல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபோன்று இனிவரும் காலங்களில் வரலாற்றை திரித்து எழுதும் முயற்சியினை கைவிடுவது நல்லது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.