ரெடிமேட் பரோட்டா மீதான GST பற்றிய தீர்ப்பையடுத்து, பரோட்டாவின் விலை அதிகரிக்கும் என தெரிகிறது.
கோதுமை மாவில் செய்யப்பட்டு பதப்படுத்தின்விற்பணை செய்யப்படும் சப்பாத்தி, ரொட்டிகளுக்கு 5% தான் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதே மாவில் செய்யப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதற்கு எதிராக குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த வாடிலால் நிறுவனம் தீர்ப்பாயத்தை அணுகியது.
சப்பாத்திக்கு 5% GST விதிக்கப்படும் நிலையில், பரோட்டாவுக்கு ஏன் 18% என்று கேள்வி எழுப்பி பிரபல பரோட்டா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதில் தீர்ப்பளித்த GST மேல் முறையீட்டு தீர்ப்பாயம், “சப்பாத்தி, பரோட்டாவில் மாவு பொதுவானதாக இருந்தாலும், காய்கறி வெங்காயம் உள்ளிட்டவை சேர்க்கப்படுவதால் 18% வரி சரிதான்” என்று குறிப்பிட்டுள்ளது.