Categories
தேசிய செய்திகள்

உங்க அடையாள அட்டை தொலைஞ்சிருச்சா?… இனி கவலை வேண்டாம்…வந்துவிட்டது இ- வாக்காளர் அட்டை…!!!

இந்தியாவில் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.

ஆதார் அட்டையை, ‘ஆன்லைனில்’ பதிவிறக்கம் செய்வது போல், இந்தாண்டு முதல், இ- வாக்காளர் அட்டையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை, தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் வெளியான, வாக்காளர் இறுதி பட்டியலில் சேர்ந்த புதிய வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அட்டை எண் அல்லது படிவம் -6 எண்ணை பயன்படுத்தி, ‘ஆன்லைன்’ மூலமாக, ‘இ-எபிக்’ எனும் இ- வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். இந்திய தேர்தல் கமிஷனின், http://votersportal.eci.gov.in / https://www.nvsp.in/ என்ற இணைய முகவரியில், ‘இ- வாக்காளர்’ பதிவிறக்கம் செய்யலாம்.

முதல்கட்டமாக, 28ம் தேதி வரை புதிய வாக்காளர் மட்டும் பதிவிறக்கம் செய்யலாம். அடுத்தகட்டமாக, அனைத்து வாக்காளரும் தங்களது ‘இ- வாக்காளர்’ அட்டையை பதிவிறக்கம் செய்து, ‘மொபைல் போனில்’ வைத்து கொள்ளலாம். வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தவர், இதுவரை வாங்காத வாக்காளரும், இச்சேவையை பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |