அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என உத்தரவிட்டுள்ளது. ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி விட வேண்டும் என்று நினைத்தபடி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இந்த நீதிமன்ற உத்தரவு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பங்கேற்பார் என இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது. இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இரு தரப்பாக இருப்பதால் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் “காழ்ப்புணர்ச்சியோடு இருக்கிறவர்களுக்கு விடியும் போது கிடைத்த அடி தான் இந்த தீர்ப்பு”என புகழேந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், இனி அதிமுகவில் ஓபிஎஸ் தான் தலைமை.. ஒருங்கிணைப்பாளர் அவர்தான். காரணமின்றி கட்சியை விட்டு காழ்ப்புணர்ச்சியுடன் ஒருவரை நீக்க நினைத்தவருக்கு விடியும் போது கிடைத்த அடி தான் இந்த தீர்ப்பு என்று அவர் கூறியுள்ளார்.