Categories
மாநில செய்திகள்

இனி அது தேவையில்லை…! ஆதார் OTP மட்டும் போதும்…. நேரத்தை மிச்சப்படுத்திய மின்வாரியம்…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் உள்ள 2,811 மின் அலுவலகங்களிலும் நடக்கிறது. இந்நிலையில்மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் சேர்க்கும் பணியை மின் வாரியம் எளிமைப்படுத்தியுள்ளது. முன்பு, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை சேர்க்க வேண்டும் என்றால், அதன் ஜெராக்ஸை அப்லோட் செய்ய வேண்டும். இதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இதனால், இனி அது தேவையில்லை, வெறும் ஆதார் எண் மட்டும் பதிவு செய்தால்போதும், அதன்பின் மொபைலுக்கு வரும் OTPஐ பதிவிட்டால், அனைத்தும் அப்டேட் ஆகிவிடும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |