சிறுவயதினர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன் கொடுமை குறையும் என பலர் எதிர்பார்த்து வரும் நிலையில், நாளுக்கு நாள் அவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவ்வாறு சிறுவயதினர் மீது பாலியல் வன் கொடுமை நிகழ்த்துபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யபடுகின்றனர். இச்சூழலில் போக்சோ சட்டத்தில் கைது செய்யும்போது அவசரம் வேண்டாம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
காதல் உறவு, திருமணம் உறவு உள்ளிட்ட போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது. அதற்கு பதில் சம்மன் அனுப்பி எதிரி மற்றும் எதிர் மனுதாரர்களை விசாரணை மேற்கொள்ளலாம். குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் படி மட்டுமே கைது செய்ய வேண்டும்.