Fastag Recharge ஆன்லைனிலேயே ஈஸியாக செய்யலாம். அது எப்படி என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
ஜனவரி 1 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டயாமாகிறது. நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
ஃபாஸ்டேக் மூலம் நீங்கள் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக வங்கியில் இருந்து பணத்தை செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைந்துள்ளன. இதில் முன்னதாகவே நீங்கள் உங்கள் யுபிஐ மற்றும் வங்கிகள் மூலம் ரிசார்ஜ் செய்துக்கொள்ளலாம்
ரீசார்ஜ் செய்வது எப்படி?
முதலில் Fastag Recharge செய்ய விரும்புவர்கள் Google Play Store-ல் Google Pay என்று Search பெய்து இந்த செயலியை Install செய்ய வேண்டும்.
அதன்பிறகு Google Pay-ஐ Open செய்தவுடன் உங்களுடைய வங்கி கணக்கு விபரங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து முதல் பக்கத்தில் உள்ள New என்ற நீலநிற பட்டனை கிளிக் செய்யவும். Start a Payment பகுதியில் 6 Options (Mobile Recharge, Bill Payments, Bank Transfer, Phone Number, UPI ID or QR Code, Self Transfer) காண்பிக்கப்படும். அதில் UPI ID Or QR Code என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
அதை கிளிக் செய்தவுடன் இரண்டு Option-கள் கொடுக்கப்பட்டிருக்கும் (UPI ID or Scan QR Code) அதில் UPI ID என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள Fastag UPI ID-ஐ அங்கு உள்ளீடு செய்ய வேண்டும்.
அதன் பின் Verify என்பதை கிளிக் பெய்த பிறகு உங்களுடைய பெயர் காண்பிக்கப்படும். அதாவது Fastag யாருடைய பெயரில் உள்ளதோ அவருடைய பெயர் காண்பிக்கப்படும். அதன் பின் OK பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் அடுத்த Step-ல் Continue என்பதில் கிளிக் செய்ய வேண்டும். இப்போது Recharge செய்வதற்கு Pay என்ற Option காட்டப்படும். அதில் கிளிக் செய்து எவ்வளவு தொகை என்பதை Type செய்து Proceed to Pay பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
அதன்பிறகு Google Pay செயலியில் நீங்கள் பதிவு செய்யும் போது கொடுத்த நான்கு இலக்கு எண்ணை (Verify Pin) உள்ளீடு செய்தால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு Fastag Recharge செய்யப்படும்.
Google Pay பெயலியில் மட்டும் இல்லாமல் Phonepe, Paytm, Amazon போன்ற அனைத்து செயலிகள் மூலமாகவும் நீங்கள் Fastag Recharge செய்து கொள்ளலாம்.