தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காலை 6 மணி முதல் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.