பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சமூக பாதுகாப்பு திட்ட உதவிகளை மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது. ரேஷன் கார்டுகள் மூலமாக நாட்டு மக்களுக்கு குறைந்த விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலத்தில் கரீப் கல்யான் திட்டத்தின் கீழ் இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒருபக்கம் இலவசமாக உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டாலும் மற்றொரு பக்கம் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவதில் மோசடி நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவான அளவில் தானியங்கள் வழங்கப்படுவதாக பயனாளிகள் கூறியுள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய முறை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் எலக்ட்ரானிக் எடை இயந்திரம் வைக்கப்படும். இதன் மூலம் மட்டுமே உணவு தானியங்கள் வினியோகம் செய்யப்படும். இந்த இயந்திரத்தில் உணவுப்பொருட்களை குறைவாக வினியோகம் செய்வது கட்டுப்படுத்தப்படும்.
மேலும் பொதுமக்களுக்கும் வினியோகதிற்கும் இடையில் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கும் என நம்பப்படுகிறது. ரேஷன் கார்டு விஷயத்தில் அரசு தரப்பில் இருந்து நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. உணவு வினியோக சேவையில் எந்த பிரச்சனையும் ஏற்பட கூடாது என்பதற்காக அரசு தரப்பில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.