அனைத்து அட்டை தரர்களுக்கு பருப்பு, 5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாக வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். ஏழை மக்கள் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலால் பாதிக்கபட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு ரேஷன் கடையில் சிறப்பு நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக டிசம்பர் மாதம் PHH மற்றும் AAY ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்புக்கு பதில் 5 கிலோ முழு கொண்டைக்கடலையும், NPHH அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ துவரம்பருப்பு இலவசமாக வழங்கவும், மற்ற பொருட்களை வழக்கம்போல் வழங்கவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.