இனி அனைத்து எம்எல்ஏக்களும் ஒரே பென்ஷன் தொகையை வழங்குவதற்கான புதிய திட்டத்திற்கு பஞ்சாப் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி முன்னாள் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் இனி ஒரே பென்சன் தொகை தான். இதன்மூலமாக அரசியலுக்கு நிறைய பணம் மிச்சமாகும். இதற்கு முன்பு வரை முன்னால் எம்எல்ஏக்களுக்கு பென்ஷன் வழங்கும் போது அவர்கள் எத்தனை முறை எம்எல்ஏவாக பொறுப்பு வகித்தார்கள் என்பதை கணக்கிடப்பட்டு அதற்கு ஏற்ப பென்சன் தொகை வழங்கப்பட்டது.
தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது. தனது தேர்தல் அறிக்கையில் எம்எல்ஏ பென்ஷன் திட்டத்தில் சீர் திருத்தம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கான நடவடிக்கையை பஞ்சாப் மாநில அரசு எடுத்துள்ளது. அதன்படி வாக்குறுதிக்கு ஏற்ப “ஒரே எம்எல்ஏ ஒரே பென்ஷன்”என்ற திட்டத்தை பஞ்சாப் அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாப் மாநில அரசுக்கு 19.53 கோடி ரூபாய் செலவு மிச்சமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது சுமார் 300 முன்னாள் எம்எல்ஏக்கள் பென்ஷன் பெற்று வருகிறார்கள். புதிய பென்ஷன் திட்டத்தின்படி அவர்கள் அனைவருக்கும் இனி மாதம்தோறும் 60 ஆயிரம் ரூபாய் பென்ஷனும் அகவிலைப்படியாக 1.2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஒரு பதவிக் காலத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒரு முறைக்கு மேல் எம்எல்ஏவாக இருந்தவர்களுக்கு ஒவ்வொரு பதவி காலத்திற்கும் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு அனைவருக்கும் ஒரே பென்சன் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.