பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு 6000 ரூபாய் என மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப்படம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகளுக்கு தற்போது வரை 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 10-வது தவணைக்காக பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
டிசம்பர் 15ஆம் தேதிக்கு மேல் பணம் வரும் என்று தகவல் வெளியாகி நிலையில் சில காரணங்களுக்காக பணம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பணம் கிடைத்துவிடும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு இரட்டை மகிழ்ச்சி தரும் விதமாக அடுத்த தவணையில் இருந்து 4 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதனால் pm-kisan திட்டத்தில் நிதி உதவியை இரட்டிப்பாக அரசு ஆலோசனை செய்து வருகிறது. அதன்படி விவசாயிகளுக்கு இனி pm-kisan திட்டத்தில் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் நிதி உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த முடிவை இறுதி செய்யப்பட்டு விட்டால் அடுத்த தவணையில் இருந்து விவசாயிகளுக்கு 4000 ரூபாய் நிதி உதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. பத்தாவது தவணைப் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு விட்ட நிலையில் இரு மடங்கு பணம் கிடைப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.