Categories
மாநில செய்திகள்

இனி அம்பேத்கர் பிறந்தநாள் “சமத்துவ நாள்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!!!

தமிழ்நாடு சட்டசபையில் துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவச் சூரியன் ஆவார். அதுமட்டுமல்லாமல் பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன். சமூகம் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வை கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி வாயிலாக சமப்படுத்திய போராளி ஆவார்.
அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனிமேல் தமிழகம் முழுவதும் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்படும் என்றும் அம்பேத்கர் வேண்டாததை நீக்கிய சிற்பி, வேண்டியதை சேர்த்த ஓவியர் என்றும் புகழாரம் சூட்டினார்.

Categories

Tech |