சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு தமிழகம் வந்த சசிகலாவால் அதிமுகவில் பெரும் அதிர்ச்சி ஏற்படும் என்று கருத்து நிலவியது. விவாதங்களும் அனல் பறந்தன. ஆனாலும் சொல்லும்படியாக எவ்வித அதிர்வுகளும் இல்லாத நிலையில், சசிகலா தொடர்ந்து அமைதி காத்து வந்தார். இந்த சூழலில் திடீர் திருப்பமாக அரசியலிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் மீது அன்பு அக்கறை காட்டிய ஜெயலலிதா தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ஜெயலலிதா இருந்தபோது எப்படி அவரது எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, இப்போதும் அப்படியே இருக்கின்றேன். நான் என்றும் பதவிக்காகவும், பணத்துக்காகவும், அதிகாரத்துக்காக ஆசைப்பட்டதில்லை.
திமுக ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக நடந்து ஜெயலலிதா ஆட்சி நிலவ பாடுபடவேண்டும். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய என்றும் தெய்வமாக விளங்கும் என் அக்கா புரட்சித்தலைவியிடமும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கின்றேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.