தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. விஜயதசமியன்று பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வந்த நிலையில் இந்த வருடம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விஜயதசமி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியாகாததால் விஜயதசமியில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ளாமல் இருக்கின்றனர்.
தனியார் பள்ளிகள் விஜயதசமி அன்று போட்டி போட்டுக்கொண்டு மாணவர் சேர்க்கையை சேர்க்கும் நிலையில் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிடுகிறதா? என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.