தங்களுடைய வயதான காலத்தில் உதவும் என்பதற்காக சீனியர் சிட்டிசன் ஏராளமானவர்கள் தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு, மாத வருமான திட்டம், சீனியர் சிட்டிசன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் சீனியர் சிட்டிசன்களுக்கு நிம்மதி தரும் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவர்கள் இதற்கு முன்னதாக தங்களுடைய அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் நேரடியாக தபால் அலுவலகங்களுக்கு சென்று தான் பணத்தை எடுக்க முடியும். இதனால் வயதான காலத்தில் அவர்களுக்கு தேவையில்லாத அலைச்சலும் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் தபால் அலுவலகங்களில் சீனியர் சிட்டிசன்கள் சார்பில் பணம் எடுக்க சம்பந்தப்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட்ட வேறு யாராவது வந்து பணத்தை எடுத்துவிடலாம். அதற்கு சீனியர் சிட்டிசன் சார்பாக பணம் எடுக்க யாராவது ஒருவரை நியமனம் செய்து Form- 12 என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட போஸ்ட் மாஸ்டருக்கு அனுப்ப வேண்டும். அதில் சீனியர் சிட்டிசனின் கையொப்பமும் இருக்கவேண்டும். இது குறித்த மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள பக்கத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் சென்று கேட்டு தெரிந்து கொள்ளலாம்.