Categories
மாநில செய்திகள்

இனி அலைய வேண்டாம்…..ரேஷன் கடைகளிலேயே சிலிண்டர் வாங்கிக்கலாம்….. அரசு அடுத்தடுத்து சூப்பர் அறிவிப்பு….!!!!

இனி தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர்களும் விற்பனை செய்யப்படும் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் 33 ஆயிரத்து 377 நியாய விலை கடைகள் கூட்டுறவு துறை மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு நியாய விலை கடைகள் மூலமாக 2, 02,45,357 ரேஷன் அட்டைக்காரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மக்களுக்கு கலப்படமில்லாத தரமான பொருட்களை விற்பனை செய்யும் விதமாக தமிழக அரசின் ஊட்டி தேயிலை, அரசு உப்பு பனைவெல்லம், உள்ளிட்ட காதி பொருட்கள் கூட்டு விற்பனை சங்கங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பெரும் பல்நோக்கு கூட்டுறவுச்சங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாய விலைக் கடைகளில் பரீட்சார்த்த முறையில் IOC இன் 5 கிலோ 2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் Google Pay, Paytm போன்ற UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |