ராகவாலாரன்ஸ் இப்போது ருத்ரன், சந்திரமுகி-2, அதிகாரம், துர்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் சந்திரமுகி-2 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், 2ஆம் கட்ட படப்பிடிப்பிற்காக லாரன்ஸ் தயாராகி வருகிறார். சில நாட்களுக்கு முன் ராகவா லாரன்ஸ் தன் வலைதளப்பக்கத்தில் அவருடைய உடலுக்காக அவர் எடுக்கும் முயற்சி மற்றும் அவர் இயக்கிவரும் அறக்கட்டளை குறித்தும் பதிவிட்டிருந்தார்.
அத்துடன் இனி மக்களுக்கு சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவுசெய்துள்ளேன். ஆகவே தன் அறக்கட்டளைக்கு உங்களது பணத்தை நன்கொடையாக வழங்கவேண்டாம் என கேட்டுககொண்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தன் சமூகவலைத்தளப்பக்கத்தில் என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் என குறிப்பிட்டு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், இனிமேல் நான் யாருக்கு உதவிசெய்தாலும், அவர்கள் என் காலில் விழக்கூடாது என கருதுகிறேன். அவர்களின் காலில் நான் விழுந்துதான் என்னுடைய சேவையினைச் செய்வேன். சேவையே கடவுள் என்று பதிவிட்டு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.