Categories
உலக செய்திகள்

“இனி அவ்ளோ தான்!”.. தம்பியுடன் பேசிய ரகசியத்தை வெளியிட்ட தொலைக்காட்சி.. கவலையடைந்த இளவரசர் வில்லியம்..!!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் தன் சகோதரர் ஹரியிடம் தனியாக பேசியது மீண்டும் அமெரிக்க தொலைக்காட்சியில் வெளியானதால் அவர் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார்.

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும், ஓப்ரா வின்பிரேக்கு அளித்த பேட்டி தான் ராஜ குடும்பத்தை பற்றி நாங்கள் பேசிய கடைசி பேச்சாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது இளவரசர் ஹரி, தன் சகோதரர் வில்லியம் மற்றும் தந்தை சார்லஸ் ஆகியோருடன் உரையாடியதாக அமெரிக்க தொலைக்காட்சியில் செய்தி வெளியானதால் ராஜ குடும்பத்தினர் வருத்தம் அடைந்துள்ளனர்.

அதாவது CBS தொலைக்காட்சியின் தொகுப்பாளினியான Gayle King என்பவர், நேற்று முன்தினம் ஒரு தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி அவரது சகோதரர் மற்றும் தந்தையுடன் பேசியதாக தெரிவித்துள்ளார். மேகனின் தோழியான இவர், இந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், ஒரு வேளை அவர் உயிரிழந்துவிட்டார் எனில், தங்களது நேர்காணலை ஒத்திவைக்க வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஒப்பந்தம் செய்திருந்ததாக கூறியுள்ளார்.

இவ்வாறாக, ராஜ குடும்பம் குறித்த செய்திகள் அமெரிக்க தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் இளவரசர் வில்லியம் தன் சகோதர் ஹரியிடம் தான் பேசுவதெல்லாம் அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வாய்ப்பிருக்கிறது. எனவே உறவுகளை ஒன்றிணைக்கும் முயற்சியை நாம் அடுத்து மேற்கொள்வது சிரமம் தான் என்று மிகுந்த வருத்தம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |