எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய வசதியை வழங்கி வருகிறது. தற்போது இணைப்பு பெற விரும்பும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது ஆதார் அட்டையை காண்பித்து உடனடியாக எல்பிஜி இணைப்பை பெறலாம். கேஸ் சிலிண்டரை பெற இப்போது ஆதார் தவிர வேறு எந்த ஆவணத்தையும் நீங்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை. எரிவாயு நிறுவனங்கள் புதிய இணைப்புகள் வழங்குவதற்கு பல வகையான ஆவணங்களை கேட்கின்றன.
குறிப்பாக முகவரி சான்று வழங்குவது அவசியமாகிவிட்டது. இதனால் பலரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதனால் அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு இப்போது எளிதாக சிலிண்டர் கிடைக்கும். ஆதார் எண்ணை காட்டி யார் வேண்டுமானாலும் புதிய எல்பிஜி இணைப்பை பெற முடியும். இந்த வாடிக்கையாளர்களுக்கு முதலில் மானியம் இல்லாத இணைப்பு வழங்கப்படும். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் முகவரி சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இந்தச் சான்று சமர்ப்பிக்கபட்டவுடன் சிலிண்டர் மீதான மானியத்தில் பலனும் வழங்கப்படும்.
இந்த வழியில் எல்பிஜி இணைப்பைப் பெறுங்கள்:
1. அருகில் உள்ள கேஸ் ஏஜென்சிக்கு செல்ல வேண்டும்.
2. பின்னர் LPG இணைப்பின் படிவத்தை நிரப்பவும்.
3. அதில் ஆதார் விவரங்களைக் கொடுத்து, படிவத்துடன் ஆதார் நகலை இணைக்கவும்.
4. படிவத்தில் உங்கள் வீட்டு முகவரி பற்றிய செல்ஃப் டிக்லரேஷனை அளிக்கவும்.
5. நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் மற்றும் வீட்டின் எண் என்ன என்பதை அதில் தெரிவிக்க வேண்டும்.
6. இப்படி செய்தவுடன் உங்களுக்கு உடனடியாக எல்பிஜி இணைப்பு வழங்கப்படும்.
ஆதார் அட்டையுடன் சிலிண்டர் இணைப்பு பெறும் இந்த திட்டம் அனைத்து வகையான சிலிண்டர்களுக்கும் பொருந்தும். வணிக சிலிண்டர்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இந்த திட்டம் 14.2 கிலோ, 5 கிலோ ஒற்றை, இரட்டை அல்லது கலப்பு சிலிண்டர் இணைப்புகளுக்கானது. இதே விதி FTL அல்லது Free Trade LPG சிலிண்டர்களுக்கும் பொருந்தும்.
எஃப்டிஎஸ் சிலிண்டர் ஷார்டி சிலிண்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இதை நீங்கள் கடைகளிலும் வாங்கலாம். இந்த சிலிண்டரை எரிவாயு ஏஜென்சிகள் அல்லது பெட்ரோல் பம்புகளில் இருந்தும் வாங்கலாம். இதற்கு எந்த விதமான ஆவணமும் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் காட்டி இந்த சிறிய சிலிண்டரை வாங்கலாம்.