இந்தியாவில் கல்வி கட்டணத்தில் இருந்து மளிகை சாமான்கள் வாங்குவது மற்றும் பில்களை செட்டில் செய்வது வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆதார் எண்ணை வைத்து BHIM செயலி மூலம் பணம் அனுப்பலாம் என்று ஆதார் அமைப்பு (UIDAI) அறிவித்துள்ளது. பீம் செயலியில் பணம் அனுப்பும் போது ஆதார் எண்ணை வழங்கினாலே போதும். வங்கி கணக்கு விவரங்களுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் பணம் அனுப்பப்படுகிறது. அதனைப் போல ஒரே ஆதார் எண்ணை நிறைய வங்கி கணக்குகளுடன் இணைந்திருப்பவர்கள், எந்த வங்கி கணக்கில் பணம் அனுப்ப வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம்.
Categories