Categories
தேசிய செய்திகள்

இனி ஆதார் கார்டு இருந்தால் மட்டும் போதும்…. எல்லாமே ரொம்ப ஈஸி…. பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்….!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிகப்பெரிய அடையாள ஆவணமாக உள்ளது.இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்து விட்டது.ஆதார் என்பது பணம் தொடர்பான ஒரு ஆவணமாகவும் தற்போது உள்ளது. வங்கிகளில் ஆதார் என்பதே மிக முக்கியமான விஷயமாக இருக்கின்றது.எனவே ஆதார் கார்டில் உங்களின் தனிநபர் விவரங்களை அப்டேட் ஆக எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

இது தொடர்பாக ஆதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், வங்கி கணக்கு திறப்பதற்கு ஆதார் இருந்தால் மிக எளிது என கூறியுள்ளது. அதனைப் போலவே ஆதார் கார்டில் அப்டேட் செய்வதற்கு ஆன்லைன் மூலமாக எளிதில் செய்யலாம். இதற்கு கட்டணமாக 25 ரூபாய் மற்றும் 50 ரூபாய் வசூல் செய்யப்படும் எனவும் இதில் 25 ரூபாய் என்பது ஆன்லைன் சேவை கட்டணம் அதனைப் போலவே நேரடியாக ஆதார் சேவை மையத்திற்கு சென்று அப்டேட் செய்தால் ஐம்பது ரூபாய் செலுத்த வேண்டும் என ஆதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |