சுயநிதிக் கல்லூரிகள் மூலம் மாணவர்களுக்கு ஆன்லைனில் பட்டப்படிப்பு மேற்கொள்ள யுஜிசி திட்டமிட்டுள்ளது.
கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படிக்க பல்கலைக்கழக மானியக்குழு புதிய வரைவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 900 கல்லூரிகளில் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க யுஜிசி அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது.
மேலும் கல்லூரிகளில் சேர்ந்து மாணவர்கள் படிக்கும் அதே பாடத்திட்டத்தின்படி ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்த அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. ஆனால் விரைவில் இதற்கான வரைவு திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. மேலும் ஆன்லைன் பட்டங்களை வழங்கும் அனுமதி தேசிய தரச்சான்றிதழ் மதிப்பீட்டில் முன்னணியில் உள்ள கல்லூரிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் நேரடியாக கல்லூரியில் படிப்பது போன்று இந்த சுயநிதி கல்லூரிகள் இருக்கும் என பல்கலைக்கழக மானியக் குழுத்தலைவர் ஜகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.