Categories
சென்னை மாநில செய்திகள்

இனி ஆன்லைனில் சொத்து வரி செலுத்தினால்…. கேஷ்பேக், சினிமா டிக்கெட்?…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!!

ஆன்லைன் மூலம் சொத்துவரி செலுத்தினால் குறிப்பிட்ட வங்கிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கேஷ் பேக், சினிமா டிக்கெட் போன்ற சலுகைகளை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.புதிய சொத்து வரி வசூலிக்கும் பணியை தற்போது சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதன்படி சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்த ஜூன் 27ஆம் தேதி வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு பொது சீராய்வு அறிவிப்புகள் தபால் மூலமாக வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் புதிய சொத்து வரியினை எளிதாக செலுத்தக்கூடிய வகையில் சென்னை மாநகராட்சி சார்பாக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.அதன்படி வருவாய் அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி என்ற பெயரில் காசோலை மற்றும் வரைவோலை மூலம் வரி செலுத்தலாம். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக வரி வசூலிப்பவர்களிடம் செலுத்திக் கொள்ளலாம். இளையதள மூலமாக எந்த ஒரு பரிமாற்ற கட்டணமும் இல்லாமல் செலுத்த முடியும். அதனைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும், நம்ம சென்னை மற்றும் பேடிஎம் முதலிய கைபேசி செயலி மூலமாகவும் சொத்து வரி செலுத்தலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அரசு இ சேவை மையங்களிலும் சொத்து வரி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சொத்து வரியை ஆன்லைன் மூலமாக செலுத்தினால் குறிப்பிட்ட வங்கிகளின் நிபதனைகளுக்கு உட்பட்டு கேஷ் பேக், வவுச்சர் மற்றும் சினிமா டிக்கெட் போன்ற சலுகைகளை வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Categories

Tech |