தமிழக அரசு துறை சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றி வருகிறது. அந்த வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள காகித வடிவிலான 2.22 கோடி பக்க ஆவணங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு 24.56 ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது சார்பதிவாளர் அலுவலகங்களில் தற்போதைய நிலவரப்படி 1974ஆம் ஆண்டுக்கு பின்னர் பதிவான ஆவணங்களுக்கான வில்லங்கச் சான்றிதழ் மட்டுமே ஆன்லைன் முறையில் கிடைக்கும். அதற்கு முன்னர் உள்ள ஆவணங்கள் எதுவுமே ஆன்லைன் முறையில் கிடைக்காது. இதனால் 1950 ஆம் ஆண்டுக்கு பின்பு பதிவான ஆவணங்களுக்கான வில்லங்கச் சான்றிதழ்களை ஆன்லைன் முறையில் வழங்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் 1950ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட சொத்து விவரங்களை ஆன்லைனில் பார்க்கும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி 1950ஆம் ஆண்டு முதல் பதிவான சொத்து வில்லங்க விவரங்களை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். மேலும் வில்லங்க சான்றிதழ்களை தெரிந்து கொள்வதற்கு https://tnreginet.gov.in/portal/ என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.