தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது கிராமப்புற பகுதிகளில் சாலை மேம்பாட்டு, பனைமர பரப்பை அதிகரித்தல், குடிநீர் வசதியை மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் அறிவித்தார்.
கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இனி இணைய வழியில் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்று ஊரக வளர்ச்சி துறை அறிவித்துள்ளது. மேலும் நீர் மற்றும் நில வேளாண்மை பணிகள் 683.95 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்றும், பசுமையான தமிழகத்தை உருவாக்க மகளிர் குழுக்களின் கட்டமைப்புகளை ஈடுபடுத்தி புதிய நாற்றாங்கால் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.