விமானப் பயிற்சி உள்ளிட்ட விமான போக்குவரத்து சார்ந்த பல்வேறு சேவைகள் இனி இ-ஜி சி ஏ ஆன்லைனில் கிடைக்கும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் பல சேவைகளை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விமான போக்குவரத்து இயக்குனரகத்தில் மின்னணு நிர்வாக நடை முறையை மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கிவைத்தார். ஒப்புதல்கள், உரிமங்களை உட்பட பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறலாம். இந்தத் திட்டம் விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்தில் டிஜிட்டல் மாற்றத்திற்கான பயணத்தில் மிக முக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Categories