இந்தியாவில் ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று. அரசுப் அடங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற ரேஷன் கார்டு மிக முக்கியம். ரேஷன் கடைகள் மூலமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது இருப்பிடச் சான்றாகவும் ரேஷன் கார்டு ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர். முன்பெல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற ரேஷன் கார்டு விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது மிக எளிதாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
- முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையத்தளத்தில் ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் தோன்றும் படிவத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். பிறகு ஆதார், பான், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக் போன்ற ஆவணங்களை இணைக்க வேண்டும்.
- அடுத்ததாக குடும்ப உறுப்பினர்கள் விவரம், எரிவாயு இணைப்பு விவரம் போன்றவைகளை பதிவிட வேண்டும்.
- அனைத்து நடைமுறைகளையும் முடித்த பிறகு Reference எண் கிடைக்கும். அப்போது உங்கள் விண்ணப்பதிவு உறுதி செய்யப்படும்.
- உங்கள் விவரங்களை அதிகாரிகள் சரிபார்த்து உங்கள் ரேஷன் கார்டை வீட்டிற்கு டெலிவரி செய்வார்கள்.